ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் தூத்துகுடி கலெக்டர் திடீர் ஆய்வு!

Webdunia
புதன், 5 மே 2021 (12:40 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அந்த ஆலையில் ஆக்ஸிஜன் தவிர வேறு எந்த பணிகளும் செய்யக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது
 
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை குழு ஒன்று கண்காணிக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி கூடத்தில் கண்காணிப்பு குழு ஆய்வு செய்தனர் 
 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் தலைமையிலான குழு சோதனை செய்ததாகவும் இந்த குழுவில் உதவி ஆட்சியர் சிம் ரஞ்சித் சிங், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வு இன்னும் ஒரு சில மணி நேரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்கே என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழகத்தில் உள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்