ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இரண்டாக பிளவுபட்ட அதிமுகவில் ஓபிஎஸ் பக்கம் இருந்தார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுகுட்டி. அவர் தற்போது ஓபிஎஸ் அணி தன்னை புறக்கணிப்பதாக கூறி அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ஆறுகுட்டி, அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஓபிஎஸ் அணி ஏற்க தயாராக இல்லை. ஓபிஎஸ் அணி என்னைப் புறக்கணிப்பதால் நான் அவர்களை புறக்கணிக்கிறேன்.
அணியை இணைக்க வேண்டும் என்றால் தற்போதைய முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் சேர்ந்து பேசினால் போதும். அதை விட்டுவிட்டு இணைக்கனும் என்று சொல்லி அந்த பக்கம் இரண்டு பேர், இந்த பக்கம் இரண்டு பேர் பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் பிரச்சனைதான் பெரிதாகிகிறது.
அணிகள் இணையவில்லை என்றால் கட்சி காணாமல் போய்விடும் ஆனால் அதனை யாரும் கேட்பதற்கு தயாராக இல்லை. மேலும் தன்னை கூட்டங்களுக்கு அழைக்காமல் ஓபிஎஸ் அணி புறக்கணித்து வருவதால் அவர்களை தான் புறக்கணித்து ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் வேறு எந்த அணியிலும் இணைய இருப்பதாக கூறவில்லை. தொகுதி மக்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.