தீபாவளி வருவதால் கட்டுபாடுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (09:21 IST)
தமிழகத்தில் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 

 
தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்தும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் அது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்