அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது சமீபத்தில் தனது மகளுக்கு முறைகேடாக பணி வழங்கியதாக குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான குழு அமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் தன் மீது என்ற தவறும் இல்லை என்றும் தனது மகளுக்கு பணி கொடுத்தது சம்பளத்திற்காக அல்ல என்றும் சம்பளம் இல்லாமல் சேவை செய்வதற்காக மட்டுமே என்றும் சூரப்பா விளக்கமளித்தார்
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவியை சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் சூரப்பாவின் ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களையும் விசாரணை ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த புகாரை விசாரிக்க ஒன்பது மாதம் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின் ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும் அவரை பதவியில் நீடிப்பது கேலிக்கூத்தாக்கும் என்றும் சூரப்பாவை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்