மாமனாரை மணமகன் என அழைத்த ஸ்டாலின்: திருமண வீட்டில் பரபரப்பு

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (08:35 IST)
புதுக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், மணப்பெண்ணின் மாமனார் பெயரை மணமகன் பெயராக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் காசி விஸ்வநாதன் மகன் சுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
இந்த திருமணத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பின்னர் பேசியபோது மணப்பெண்ணின் மாமனாரை மணமகன் என அழைத்ததால், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் சுதாரித்த முக ஸ்டாலின் அவர்கள் சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார்
 
முக ஸ்டாலின் இதற்கு முன் பல மேடைகளில் மாற்றி மாற்றி பேசியிருந்தாலும் மணமகன் பெயருக்கு பதிலாக மாமியாரின் பெயரை கூறியது திருமண வீட்டார்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்