பேசுபவர்கள் பேசட்டும்... ஸ்டாலின் கேர் ஃப்ரி!!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (08:42 IST)
மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவினர் பேசுவதை குறித்து கவலைப்பட போவதில்லை என ஸ்டாலின் பேட்டி. 

 
அமித்ஷா அவர்கள் திமுக மீது பல்வேறு புகார்களை விழுப்புரம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். அதிமுக – பாஜக டபுள் இன்ஜின் மாதிரி செயல்படும் என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 
 
அதற்கு அவர், அதாவது ஏற்கனவே மோடி அவர்கள் பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது அமித்ஷா அவர்கள் பேசி இருக்கிறார். நாளைக்கு மத்தியில் இருந்து – பாஜகவிலிருந்து வருபவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் பேசப்போகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 
 
ஏனென்றால், ஊழல்களையே செய்து, ஊழலிலேயே ஊதாரித்தனமாக இருந்து, ஊழலிலேயே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்து, கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் செய்து கொண்டிருக்கும் ஓபிஎஸ் ஒரு பக்கமும், ஈபிஎஸ் ஒரு பக்கமுமாக இருவரது கரங்களைத்தான் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினார்கள். அதிலிருந்து ஊழலுக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.
 
அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தக் கடன் அதிகரிப்பதைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நிச்சயமாக தேர்தல் அறிக்கையில் இது குறித்த அறிவிப்புகளும் இடம் பெறும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்