தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக தொடர்ந்து அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அமைச்சரவை குறித்து 97 பக்க ஊழல் அறிக்கையை ஆளுனரிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என அவர் ஆளுனரிடம் கேட்டுக்கொண்டதாக வெளியாகியுள்ள இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.