சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் அளித்த புத்தகம்? – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (11:56 IST)
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வழங்கிய புத்தகம் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்திற்காக 25 அம்ச கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்பித்தார். இந்நிலையில் இன்று கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி ராகுல்காந்தியை சந்தித்தார்.

அவர்களோடு அரசியல் உறவுகள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக சோனியா காந்திக்கு புத்தகம் ஒன்றை வழங்கினார். Journey of a Civilization; Indus to Vaigai என்ற அந்த ஆங்கில புத்தகத்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், வரலாற்று ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். முதல்வர் இந்த புத்தகத்தை பரிசளித்ததை தொடர்ந்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்