சோனியாகாந்தி, ராகுல் உடன் முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

வெள்ளி, 18 ஜூன் 2021 (10:38 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார் என்பதும் டெல்லியில் பிரதமரை சந்தித்த அவர் தமிழகத்தில் தேவை குறித்து எடுத்துரைத்தார் என்பதும் குறிப்பாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்ததாகவும் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில் சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்த போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் புதிய கூட்டணி அமைப்பது குறித்து சோனியா காந்தி மற்றும் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்