ரேஷனில் 2-வது தவணை நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
திங்கள், 31 மே 2021 (11:25 IST)
ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. 
 
மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு கொரோனா நிவாரண நிதி பாக்கியான ரூ.2,000 ஜூன் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இதனோடு ரேஷன் கடைகளில் 13 பொருட்களுடன் கூடிய மளிகை பொருள் வழங்குவது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்