ஊரடங்கு எப்போ முடியுதோ, அப்பதான் சரக்கு கிடைக்கும்! – அமைச்சர் தகவல்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:15 IST)
மது கிடைக்காமல் தமிழகத்தில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஏற்படுவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மது அருந்த முடியாமல் தவிக்கும் மது விரும்பிகள் கள்ள சாரயத்தை நாடுதல், தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் சிலர் ஆல்கஹால் இருப்பதால் ஷாவிங் லோஷன், வார்னிஷ் போன்றவற்றை போதைக்காக பருகி உயிரைவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. புதுக்கோட்டை டிரைவர் ஒருவர் மது கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை சம்பவம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதுவுக்கு அடிமையானவர்களை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கமணி “தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை திறப்பதாக இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்