திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு கைப்பேசிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா வழங்கினர்

J.Durai
புதன், 10 ஜூலை 2024 (14:49 IST)
முன்னாள் முதல்வர்   கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டிவிட்டர், முகநூல்(பேஸ்புக் ), யூடியூப்,  ரீல்ஸ், தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. 
 
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் அமைச்சர்கள் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகி வன்னை அரங்கநாதன், துணை மேயர் திவ்யா, பகுதிச் செயலாளர் விஜயகுமார், மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்