சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி: 16 ஆண்டுக்கு பின் நடப்பதாக அமைச்சர் உதயநிதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (14:24 IST)
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
சென்னையில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன் சென்னையில் 2007 ஆம் ஆண்டு ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் மிகவும் பிரமாண்டமாக ஆசிய ஹாக்கிப்போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்