கூடுதலாக, ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கூடுதலாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன என அமைச்சர் சிவசங்கர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், மற்ற கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வேலை நிறுத்தத்தை சமாளித்து பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் போக்குவரத்து செயல்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.