நேற்று இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் பயணிகள் அச்சப்பட வேண்டாம் என்றும் போதுமான பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என்றும், அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார்.