அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு;6வது முறையாக காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:18 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்