பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (11:35 IST)
நேற்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சென்னையில் புயல் வெள்ளம் ஏற்பட்டபோது திமுக உதவி கரம் நீட்டுவதற்கு பதிலாக பொதுமக்களுக்கு துயரத்தை அதிகம் தந்தது என்றும் இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டதாகவும் குற்றம் காட்டினார் 
 
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி ஒருமுறை கூட வரவில்லை என்றும் பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என்றும் தேர்தல் நேரத்தில் எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்காது என்றும் கூறினார் 
 
மேலும் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்பட  தென் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்