ஒடுகின்ற குதிரைக்கு தான் மவுசு... திமுகவை சீண்டும் ஜெயகுமார்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (16:23 IST)
திமுக கூட்டணியில் பேரம் பேச மாட்டோம் என குண்டுராவ் கூறியது குறித்து அமைச்சர் ஜெயகுமார் கிண்டல். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பிய போது அவர், திமுக கூட்டணியில் பேரம் பேச மாட்டோம் என குண்டுராவ் கூறியது ஒடுகின்ற குதிரை மீதுதான் பெட் கட்டுவார்கள் என்பது போல என அமைச்சர் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்