சிறுவயதில் ராமாயணம் , மகாபாரதம் படித்து வளர்ந்தேன் - அமெரிக்க முன்னாள் அதிபர்

செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:03 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது அரசியல் நினைவுகள் குறித்து வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் தனது நினைவுகள் குறித்து அதில் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனது சுயசரிதையில் இந்தியாவைக் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், உலக மக்கள் தொகையில் சுமார் ஆறில் ஒரு பகுதி மக்கள் வாழும் நாடுஇது. அங்கு 2 ஆயிரத்துக்கும் மேலான இனக்குழுக்கம் உள்ளது. 700 மேற்பட்ட மொழிகள் உள்ள நாடு இந்தியா. இருந்ததது நான் அதிபராகி இந்தியா வருவதற்கு முன் இந்தியாவைப் பற்றி எனக்கு சிறப்பாக கற்பனை இருந்தது.

நான் சிறு வயதில் இந்தோனேஷியாவில் வசித்தபோது, இந்துகளின் ராமாயணம் , மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள்தான் எனக்கு பருப்பு , கீமா சமைப்பதைக் கற்றுக் கொடுத்தனர். எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்