பத்த வச்சுட்டியே பரட்ட... ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு ஜெயகுமார் பஞ்ச்!!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:01 IST)
பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.   
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். 
 
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்து இந்த கருத்தை அவர் தவிர்த்திருக்கலாம். 
 
பத்த  வச்சுட்டியே பரட்ட, என்பது போல அவரது கருத்து தற்போது பற்றி எரிகிறது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும்? என்று யோசிக்க வேண்டும். கடந்த காலத்தை பற்றி, பழமையை பற்றி பேசி  பின்னுக்கு போய்விடக்கூடாது என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்