இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குள் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான நபர் அறிவிக்கப்படும் என ஏற்கனவே டெல்லி வட்டாரங்கள் கூறியிருந்தன. தமிழக பாஜக தலைவர் பட்டியலில் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால், சீனியர்கள் என்ற முறையில் பொன்னார் மற்றும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
பாஜகவில் முன்பெல்லாம் தலைவர் பதவிக்கு அவ்வளவாக போட்டி இருக்காது. அதற்கான எதிர்ப்பார்ப்புகளும் பெரிதாக இருக்காது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருப்பதும், தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பட்டுடன் செயல்படும் அரசு இருப்பதாலும், பாஜக மாநில தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.