கலைஞரையே எதிர்த்து பேசியவர் அஜித்: புகழ்ந்துதள்ளிய அமைச்சர் ஜெயகுமார்!!!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (13:04 IST)
அஜித் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டதை பாராட்டியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் பாஜகவுக்கு இழுக்கும் வகையில் தமிழிசை பேசினார்.
 
இந்த நிலையில் தன் மீதும் தனது ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதை அறிந்த அஜித், அறிக்கை ஒன்றில் வெளியிட்டு அதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான விளக்கத்தை அளித்தார். அதில் தன் வேலை நடிப்பது மட்டுமே என்றும் தனது அரசியலில் நாட்டமில்லை எனவும் கூறியிருந்தார். நடிகர்கள் பலர் பட ரிலீசின் போது மட்டும் அரசியல் பேசி, பட கலெக்‌ஷனை அள்ளும் சூழ்நிலையில் எதற்கும் பயப்படாமல் அஜித் ஒப்பனான பேசியதற்கு பல்வேறு தரப்பினர் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
 





































இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், அஜித்தின் அறிக்கை பாராட்டக்குரியது. அவர் தைரியமான மனிதர். கலைஞர் இருக்கும்போதே அவர் மேடையில் தைரியமாக பேசியவர். நடிகர்கள் பலர் அரசியலுக்கு அப்போ வரேன், இப்போ வரேன் என கூறிக்கொண்டிருக்கும் போது தனது வேலை நடிப்பது மட்டுமே எனவும் அரசியலில் நாட்டமில்லை எனவும்  கூறியிருப்பது பாராட்டக்குரியது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்