ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றது தினகரன் கும்பல்: திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (21:54 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கூறியதை அடுத்து அவரது மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு ஆறுமுகச்சாமி என்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வரும் நிலையில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோயை அதிகப்படுத்தி ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்தான் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து முறையாக ஆணையம் விசாரணை செய்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட கும்பல்தான் அவரை கொலை செய்தது என்று அமைச்சர் கூறியிருப்பதை அந்த ஆணையம் எப்படி எடுத்து கொள்ளும் என்றும் இதுகுறித்து ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை செய்யுமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்