சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேஷ்டியை கழ்ட்டி காட்டினாலும் அவரால் முதல்வராக முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அநாகரிகமாக பேசியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத ஜனநாயக விரோத அதிமுக அரசை முடிவுக்கு கொண்டு வர திமுக என்றுமே தயங்காது என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியை பிடிக்க முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை. அதை தான் இப்போது ஸ்டாலினும் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அராஜகம் செய்த ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தனது சட்டையை கழட்டி காண்பித்து டிராமா செய்தார். ஆனால் அவர் வேஷ்டியை கழட்டி காண்பித்தாலும் அவரால் முதல்வராக முடியாது என அநாகரிகமாக பேசினார். எதிர்க்கட்சி தலைவரை அமைச்சர் ஒருவர் வேஷ்டியை கழட்டி காண்பித்தால் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.