மருத்துவ ஆடைத் தயாரிப்பு! திருப்பூருக்கு காத்திருக்கும் அமோகமான வாய்ப்பு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:45 IST)
திருப்பூரில் இருந்து மருத்துவ ஆடை தயாரிக்கும் பணிகளுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸால் திருப்பூரில் நடந்து வந்த பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை சரியாக இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருப்பூருக்கு இப்போது மருத்துவ ஆடைகள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் பணிகள் கிடைக்க வந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார்  இதுகுறித்து கூறுகையில் ‘மருத்துவ ஆடை தயாரிக்க ஓவன் துணிகள் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட துணி தற்போது 400 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன. இந்த துணிகளை தயாரிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் உலகளாவிய மருத்துவ ஆடை தயாரிப்பு துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த ஆடைகளைத் தயாரிக்கும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்