நாகை மாவட்டம் இரண்டாக பிரிப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (11:19 IST)
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஏற்கனவே ஒரு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார் 
 
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியபோது நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38வது மாவட்டமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே நாகை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளதாகும் மயிலாடுதுறையை தலைநகராகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறை பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்