அரசு கலைக்கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (09:15 IST)
தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது என்பது குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு செப்டம்பர் 7 முதல் அதாவது இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது 
 
இன்று முதல் https://www.tngasapg.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
மேலும் தரவரிசை பட்டியல் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் சேர்க்கை 21 ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது 
 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற அறிவிப்பை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்