தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக இம்முறை பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளதாவது:
''அரசுப் பள்ளியில் படித்து, வறிய குடும்பச் சூழலிலும் தன்னம்பிக்கையோடு தேர்வெழுதி, மாவட்டத்திலேயே தனி ஆளாகத் தேர்வாகியிருக்கும் திருவாரூரைச் சேர்ந்த திருமிகு. சுதா அவர்கள், அவரைப் போன்று முன்னேற நினைக்கும் பல பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திரு. பாலாஜி அவர்களின் வெற்றி சமூகநீதிக்கான வெற்றி. நம் கல்வி உரிமையைப் பறித்திட நினைப்பவர்கள் மிரளும் வெற்றியது
தேர்வாகியிருக்கும் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் அவர்கள், எளிய குடும்ப பின்னணியிலிருந்து கடின உழைப்பால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார்
தமிழ்வழியில் பற்றுறுதியுடன் படித்து, முதல் தலைமுறை பட்டதாரியாகச் சாதித்திருக்கும் இவர்களின் பணி, சாமானியர்களின் வாழ்வு மேம்பட உறுதுணையாக அமையட்டும்.''என்று தெரிவித்துள்ளார்.