மனைவியை நாயுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய வெறி பிடித்த கணவன்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (15:13 IST)
பெங்களூரில் திருமணமாகி 7 ஆண்டுகளான ஒருவர் தனது மனைவியை நாயுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.


 
 
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாவது, தங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னை உடல் ரீதியாக தனது கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்றார்.
 
மேலும், கடந்த 4 மாதங்களாக அந்த நபர் தனது மனைவிக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி அதுபோல நடந்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நாயுடன் உடலுறவு கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
 
இதனையடுத்து அந்த நபர் மீது அவரது மனைவி அளித்த புகாரின்படி, இயற்கைக்கு மாறான குற்ற பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்