சென்னை மெரினாவில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (15:04 IST)
ஜல்லிக்கட்டு புரட்சி போன்று ஹைட்ரோகார்பனை எதிர்த்து சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. இதனால் மெரினாவில் காவல்துறையினர் கண்காணிப்பில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

 
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக முதலில் அறிவித்தது. தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 
இதையடுத்து நெடுவாசல் மக்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல்துறையினர் மீண்டும் ஜல்லிக்கட்டு போல் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்