முதல்வர்களை முனிசிபாலிட்டி மாதிரி நடத்த பாக்குறாங்க! – மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (16:52 IST)
இந்தியா முழுவதும் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் முக்கிய எதிர்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற மாநிலங்களில்பாஜகவை எதிர்த்து போட்டியிடும் முக்கிய எதிர்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பாஜக அரசு தங்கள் கட்சி ஆளாத பிற மாநில அரசுகளை நகராட்சி நிர்வாகம் போல நடத்த முயல்வதாக கூறியுள்ளார். அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை ஏவலாள் போல கையில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகள் மீது மறைமுக தாக்குதலில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ள அவர், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுனர்கள் பாஜக ஆட்கள் போல செயல்படுகின்றனர். பாஜகவிடமிருந்து இந்திய அரசியல் சாசனத்தை மீட்க எதிர்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்