மதுரை ரவுடியின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம கும்பல்

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (12:39 IST)
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி சௌந்திரபாண்டியனை கொன்று அவரது தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்களை போலீச் தேடி கொண்டிருக்கின்றனர்.

மதுரையில் உள்ள திருநகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர் என்கிற சௌந்தரபாண்டியன். இவர்மேல் 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் மதுரை காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீஸ் பல இடங்களிலும் தேடி வந்தனர். போலீஸிடம் சிக்காமல் வெவ்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் சௌந்தர்.

இந்நிலையில் சௌந்தர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்று அங்கே தங்கியிருக்கிறார். மேல்மாடியில் அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொன்று தலையை வெட்டி எடுத்து ஒரு பைக்குள் போட்டு கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கின்றனர். சௌந்தரின் அறையிலிருந்து மர்ம நபர்கள் ஓடுவதை பார்த்த உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது தலையில்லாத சௌந்தரின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்தது.

அவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் சொல்ல, உடனே தேடுதல் வேட்டையை தொடங்கினர் போலீஸார். சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகள் சென்ற பகுதியை கண்டுபிடித்த போலீஸார் அங்கே சென்று தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அபோது ஒரு குப்பைமேட்டு பகுதியில் ஒரு பைக்குள் சௌந்தரின் தலை இருப்பதை பார்த்து அதை கைப்பற்றினர்.

கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்