2015ல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (12:54 IST)
2015ல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கனமழை மற்றும் பெருவெள்ளம், நிவாரண பணிகள் குறித்து பேசிய 
அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘வெள்ளம் வெளியேறவில்லை எனக் கூற முடியாது, கடல் உள் வாங்காததால் தான் வெள்ளம் வடியவில்லை. 2015ல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது
 
வெளி மாவட்டங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்டோர் வந்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் தொண்டு நிறுவனங்களும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமே தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்