ஓ.பி.எஸ் அணியில் ‘என்னம்மா ஆச்சு உங்களுக்கு’ புகழ் சினேகன்..

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:18 IST)
கவிஞரும் பாடலசாரியருமான சினேகன் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அவரது அணியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். ராமராஜன், நடிகை லதா, செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொகுதி, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு.. நீங்க வேணும்மா எங்களுக்கு.. என கவிதை பாடிய கவிஞர் சினேகன், தற்போது ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்