ஈபிஎஸ்-ன் சொந்த மண்ணில் கால் வைக்கும் பிரதமர் மோடி..! மாஸ் காட்டும் பணியில் பாஜக தீவிரம்!

Prasanth Karthick
ஞாயிறு, 17 மார்ச் 2024 (10:32 IST)
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் சேலத்தில் நடைபெற உள்ள பாஜக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார்.



இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு மாத காலமே அவகாசம் உள்ளதால் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.

வரும் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் பிரதமர் மோடி கோவை மற்றும் சேலம் மாநாடுகளில் கலந்து கொண்டு பேச உள்ளார். 18ம் தேதி கோவையில் ரோடு ஷோ மற்றும் மாநாடு முடித்து பாலக்காடு செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து மறுநாள் சேலம் சென்று மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். 19ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பாஜக மாநாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுகவின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டி மாநாடு நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைமை மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறதாம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்