மாவட்ட ஆட்சியருக்காக கொடுக்கும் மரியாதை முதல்வருக்கு கொடுப்பதில்லை !

சி.ஆனந்தகுமார்
புதன், 30 அக்டோபர் 2019 (17:32 IST)
முதல்வரின் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் கரூர் செய்தி மக்கள் தொடர்பு துறை – நடவடிக்கை எடுப்பாரா ? தமிழக செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை என்பது தமிழக அரசின் சாதனைகளையும், செய்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசிற்கும் ஒரு பாலமாக விளங்குவது தான் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலையாய கடைமையாகும்,.

இந்நிலையில் தற்போது உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி பாவேந்தன், ஏற்கனவே பெரம்பலூரில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக இருந்த நிலையில், இவர் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வாட்ஸ் அப் குழு மூலமாக தான் பகிர்ந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஏதாவது பேட்டி என்றால், அதாவது ஜோதிமணி இவர் மீது புகார் கொடுப்பதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்கள், சந்திக்க உள்ளார் என்று அவரும், ஏ.பி.ஆர்.ஒ அனைவரும் செய்தியாளர்களுக்கு நேரிடையாக பேசி செய்தி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கண்டித்து கரூர் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்தும் அடுத்த நாள் ஆர்பாட்டம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனே மாவட்ட ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களை சந்திக்கின்றார் என்று ஆங்காங்கே செய்தி மக்கள் தொடர்புத்துறை பி.ஆர்.ஒ மற்றும் ஏ.பி.ஆர்.ஒ ஆகியோர் கரூர் மாவட்ட செய்தியாளர்களை செல்போனில் தொடர்புக் கொண்டனர்.

ஆனால், இங்குள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏராளமான திட்டங்களை தொடக்கி வைக்கும் போதும் இன்றுவரை செய்தியாளர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல், அனைவருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாகம், இன்று தமிழகத்தின் அதாவது ஒரு மாநில முதல்வர் வருகையும் புறக்கணிக்கும் விதமாக அதையும் வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளது மற்ற அ.தி.மு.க ஊடகம் மற்றும் செய்தித்தாள்களையும் அவமதிக்கும் செயலாக இருப்பதோடு, அ.,தி.மு.க கூட்டணியை சார்ந்த தொலைக்காட்சிகளையும் இருட்டடிப்பு செய்யும் செயலாக இருப்பதாக அ.தி.மு.க வினரிடையே பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சென்னை அலுவலகம் என்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் நடவடிக்கையும் துரித வேகத்தில் தேவை என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்