மதுபாட்டிலின் உள்ளே இறந்து போன பல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:15 IST)
மதுபாட்டிலின் உள்ளே இறந்து போன பல்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு!
டாஸ்மாக் மது கடைகள் வாங்கிய மதுபாட்டிலில் உள்ளே இறந்து போன பள்ளி ஒன்று இருந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மதுபான கடையில் கடையில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ பாண்டி என்பவர் மது பாட்டில் வாங்கினார். அவர் மது பாட்டிலை மிகவும் ஆவலுடன் பிரித்து மதுவை ஊத்தி கொண்டிருந்தபோது உள்ளே ஒரு இறந்து போன பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனடியாக அவர் தனது செல்போனில் இதுகுறித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மதுபான கடையில் வாங்கிய மதுவின் உள்ளேயே இறந்து போன பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்