அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி: காவல் நிலையத்தில் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (17:43 IST)
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி: காவல் நிலையத்தில் போராட்டம்
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி வழங்கியதால் காவல் நிலையத்தில் பெரும் போராட்டம் நடந்துள்ளது 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவருக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்
 
ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் அமித்ஷா  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்ட நிலைய்ல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு பல்லி விழுந்த பிரியாணி வழங்கிய காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்