தமிழக அரசு தடை விதித்துள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் எவை எவை?

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (20:12 IST)
சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு தடை கோரிய மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் ஜனவரி 1 முதல் இந்த தடை அமலாக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எவை எவை என்று இப்போது பார்ப்போம். மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுக்கள், ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் மேஜை விரிப்பான் உள்பட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால், எண்ணெய், தயிர் பாக்கெட்டுக்களுக்கும், மருந்து பொருட்களின் கவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்