தமிழகத்தில் மின்னல் தாக்கி 5 பேர் பலி...

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (09:45 IST)
விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
இதற்கு முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்