இரவு நேரங்களில் சாலைகளில் நடமாடும் சிறுத்தை.. பொதுமக்கள் உஷார்

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (13:38 IST)
வால்பாறை சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை-பொள்ளாட்சி சாலைகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை, வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் சாலையில் தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை நீண்ட நேரம் அமர்ந்திருந்து பின் சாலையை கடந்துள்ளது. அதனை அந்த சாலையின் வழியாக வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் சாலைகளில் தொடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி, சிறுத்தையை புகைப்படம் எடுக்க கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்