சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (12:19 IST)
சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.74 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து 2024-25ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் தற்போது சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனேகமாக 2000 கோடி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சொத்து வரி என்பது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை, என இரண்டு வகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல் அரையாண்டுக்குள் வரி செலுத்தாமல் இருந்தால், அதை இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும். எனவே, இன்று, முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் அரையாண்டில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.895 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் நேற்று முன்தினம் வரை ரூ.375 கோடி மட்டுமே வசூலாகி இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, இன்று இரவுக்குள் சென்னை மாநகராட்சியில் உள்ளவர்கள் சொத்துவரி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு வரியை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்