10 கிலோ கஞ்சா கடத்திய பெண் பத்திரிகையாளர்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது..!

Siva
புதன், 27 மார்ச் 2024 (14:32 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா கடத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்

அப்போது அப்போது ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் சோதனை செய்தனர்

அப்போது அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது பெயர் ஜோதிகா என்றும் அவர் ஒடிசாவில் உள்ள பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்தது. இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்