கணவனை இழந்த பெண் மருத்துவர்களை குறி வைத்த வாலிபர்: கோடிக்கணக்கில் மோசடி

Webdunia
வியாழன், 16 மே 2019 (20:24 IST)
கணவனை இழந்த பெண் மருத்துவர்கள் பலரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
திருவண்ணாமலையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் திருமண இணையதளங்களில் தனது பெயரை அஜய், விஜய், விஜயகுமார், விது, சரவணன்  என பல பெயர்களில் பல கணக்குகளை பெண்களை ஏமாற்றுவதற்காக தொடங்கியுள்ளார். அவருடைய டார்கெட் கணவனை இழந்த பெண் மருத்துவர்கள் தான். குழந்தை இருந்தாலும் விதவை பெண்ணுக்கு வாழ்க்கை தரத்தயார் என அவரது கணக்கில் குறிப்பிட்டிருந்ததால் அவரது வலையில் பல பெண் மருத்துவர்கள் விழுந்துள்ளனர். 
 
சென்னையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் ஒருவர் ஆறரை கோடி ரூபாய் வரையும் சக்கரவர்த்தியின் ஆசை வார்த்தையில் மயங்கி ஏமாந்துள்ளார். அதேபோல் லால்குடியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் ரூ.20 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததோடு அவர் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தன்னையும் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனையடுத்து லால்குடி மருத்துவர் செய்த புகாரின் அடிப்படையில் சக்கரவர்த்தியை கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்