1000 ரூபாய் உனக்கு பிச்சையா? குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்த திமுகவினர்..!

Mahendran
புதன், 13 மார்ச் 2024 (12:26 IST)
ஆயிரம் ரூபாய் மகளிருக்கு பிச்சை காசு கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்களா என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சமீபத்தில் பேட்டியில் கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
 
ஆயிரம் ரூபாய் என்பது ஏழை எளியவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகை என்பது அவர்களுக்கு தான் தெரியும் என்றும் கோடியில் புரண்டு கொண்டிருக்கும் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அருமை எப்படி தெரியும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ஆயிரம் ரூபாய் வைத்து குடும்பம் நடத்துகிறவர்கள் எத்தனையோ பேருக்கு தான் அதன் அருமை தெரியும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார் 
 
இந்த நிலையில் குஷ்புவின் பிச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுகவினர் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் நெல்லை நடைபெற்ற போராட்டத்தில் குஷ்புவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இதனால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த நடிகை குஷ்பு எம்ஜிஆர் சத்துணவு திட்டம் போட்ட போது அதை பிச்சை என்று கூறி முரசொலி மாறன் மீது எந்த கண்டனமும் பதிவாகவில்லை என்றும் ஆனால் நான் பேசியதை திரித்து எனக்கு எதிராக திமுகவினர் திருப்பி விடுகின்றனர் என்றும் கூறியிருந்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்