அதிமுக, திமுக இடையே இருக்கும் உறவு என்ன? ட்விஸ்ட் அடிக்கும் பாஜக!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:58 IST)
அதிமுக, திமுக இடையே இருக்கும் உறவு என்ன? உங்களுக்கிடையே என்ன புரிதல் இருக்கிறது? என பாஜக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வேல் யாத்திரைக்கு குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜக கொடியுடன் போனாலே கைது செய்கின்றனர். இதேபோல திமுக கூட்டங்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? தமிழக காங்கிரஸ் நடத்திய கூட்டத்துக்கும் தடுப்பு நடவடிக்கை இல்லை.
 
அதிமுக, திமுக இடையே இருக்கும் உறவு என்ன? உங்களுக்கிடையே என்ன புரிதல் இருக்கிறது? ஆன்மீகம், அரசியலை கலக்கக்கூடாது என்கின்றனர். அரசு விழாக்களிலும் கூட முதல்வர், அமைச்சர்கள் அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை எதிர்த்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்