முறைகேடு பண்றாங்க.. ட்ரம்ப் குற்றச்சாட்டு! – அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!

வியாழன், 12 நவம்பர் 2020 (08:30 IST)
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஜார்ஜியா மாகாணம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையால் ஜோ பிடனின் வாக்கு எண்ணிக்கை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்