பதவி பறிபோகிறதா? அவசர அவசரமாக மல்லிகார்ஜூனே கார்கேவை சந்திக்கும் அழகிரி..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:40 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி மாற்றப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அண்ணாமலைக்கு நிகரான ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது 
 
 இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை மாற்றக்கூடாது என்றும் பாராளுமன்ற தேர்தல் வரை அழகிரி தான் மாநிலத்தலைவராக இருக்க வேண்டும் என்றும் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவை இன்று மாலை பெங்களூரில் சந்தித்து வலியுறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.  காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி நீடிப்பாரா அல்லது புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்