மூன்றாக பிரிக்கப்படும் கோயம்பேடு மார்க்கெட்...?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (16:10 IST)
கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் மூன்றாக பிரித்து அமைப்பது குறித்து நாளையும் பேச்சுவார்த்தை. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
 
மேலும், கோயம்பேடு சந்தையை மாதவரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் மூன்றாக பிரித்து அமைப்பது குறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரநிதிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்