கோயம்பேடு வியாபாரி உட்பட மூன்று பேர் பலி: அதிர்ச்சியில் சென்னை!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (08:23 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் மூன்று பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூவரில் ஒருவர் கோயம்பேடு சந்தை வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரைதவிர தாம்பரத்தை சேர்ந்த ஒருவரும், சூளைமேட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்